Breaking News

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது: வெள்ளை அறிக்கை

அட்மின் மீடியா
0

தமிழக நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2001-ல் அதிமுக ஆட்சியில் பட்ஜெட் தாக்கலின்போது பொன்னையன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். அதன்பின்பு

தலைமை செயலகத்தில் இன்று 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையில் எதாவது தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு என கூறினார்  

 
வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சம்:
 
2020-21-ம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளது 
 
தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் சுமை ரூபாய் 5.75 லட்சம் கோடி ஆக உள்ளது

தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,63,976 பொதுக்கடன் உள்ளது


தமிழக அரசின் தற்போதைய கடன் 5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை 5.24 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தின் கடன் செலுத்தும் தன்மை குறைந்ததால் , வட்டி அதிகரித்து விட்டது. 
 
 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback