செப்.1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!
அட்மின் மீடியா
0
திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் நூலகர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12-ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை திறக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன." என்று தெரிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்