Breaking News

நவம்பர் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

அட்மின் மீடியா
0
தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்

2022 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி குறித்த அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 

அதன் படி நவம்பர் 1ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

நவம்பர் 1ஆம் தேதி முதல் 30ம் தேதி வரை உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி திருத்தம் செய்யலாம், அதற்கான சிறப்பு முகாம் முகாம்களும் நடத்தப்பட உள்ளன.

புதிதாக பெயர் சேர்க்க www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் VOTER HELP LINE என்ற செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். 

ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this