Breaking News

சென்னையில் எங்கெல்லாம் கடைகள் செயல்பட தடை முழு விவரம்.....

அட்மின் மீடியா
0

சென்னை மாநகராட்சியில்  மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது


இந்த உத்தரவு 31-07-2021 முதல் 09-08-2021 வரை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடு விதிக்கப்படும் பகுதிகள்:

சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை.

புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை.

ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை.

பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு , புலிபோன் பஜார்

என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை

இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை.

அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை

ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை. 

ஆகிய 9 பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை 31.07.2021 ( சனிக் கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

மேலும் கொத்தவால் சாவடி மார்கெட் 01.08.2021 ( ஞாயிற்று கிழமை ) முதல் 09.08.2021 ( திங்கட்கிழமை ) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை





 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback