பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியீடு...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகின்றன.
கொரோனா பரவல் தீவிரத்தால் பிளஸ்2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
10 மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 11 மணியளவில் இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் பட்டியலை ஜூலை 22ஆம் தேதி முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை உங்கள் மொபைல் மூலம் எளிமையாக பார்க்க:
Tags: தமிழக செய்திகள்