Breaking News

இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழை சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவகாற்று காரணமாக தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி கோயமுத்தூர் தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வறண்ட வானிலையும் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf

Tags: தமிழக செய்திகள்

Share this