Breaking News

FACT CHECK தடுப்பூசி போட்டவர்கள் மயக்க மருந்து கொடுக்ககூடாதா? உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் ஏனைய சமூக ஊடகங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பல் மருத்துவ சிகிச்சைக்கு அளிக்கப்படும் local anaesthesia எனும் மரத்துப்போகும் ஊசி போட்டால் ஆபத்து. இறப்புக்கு வழிவகுக்கும் என  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும அந்த செய்தி பொய்யானது இது போல் வதந்தி பரப்பாதீர்கள்.

இது போல் உலகில் எந்த மருத்துவரும் அறிவிக்கவில்லை,

இது போல் ஆதாரமற்ற செய்தி பரப்புபவர்களே சிந்திக்க மாட்டீர்களா

எந்தவொரு மயக்க மருந்தின் தாக்கமும் சிறிது நேரம் மட்டுமே இருக்கும்மேலும் அதனால் உடலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை

பல் மருத்துவ சிகிச்சைக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. 

வேர் சிகிச்சை, பல் அடைத்தல், சுத்தம் செய்தல், பல் எடுப்பது போன்ற அனைத்து பல் மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளலாம் வதந்திகளை நம்ப வேண்டாம் என ASSOCIATION OF ORAL AND MAXILLO-FACIAL SURGEONS OF INDIA அறிக்கை வெளியிட்டுள்ளது

மேலும் மத்திய அரசின் உண்மை கண்டறியும் குழுவும் அந்த செய்தியினை பொய்யானது என அறிவித்துள்ளது 

எனவே யாரும் பொய்யான செய்தியினை நம்பாதீர்கள், ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback