FACT CHECK :பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா கொரோனாவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா. கோமியம் குடித்தால் கொரோனா சரியாகி விடும் என்று சொல்லியவர். இன்று தனக்கு கோவிட் வந்து சுவாசிக்க முடியாமல் போனதும். கோமியத்தை குடிக்காமல் பிரபல தனியார் மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகியுள்ளான். ஊருக்கு தான் உபதேசம். என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யப்படும் அந்த வீடியோவில் உள்ளது பதஞ்சலி சேர்மன் ஆச்சார்ய பாலகிருஷ்ணா தான்
ஆனால் அந்த வீடியோ தற்போது எடுக்கபட்டது இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 26.08.2019 அன்று அவருக்கு புட் பாய்சன் காரணமாக ஹரித்வாரில் உள்ள பூமனந்த் என்ற மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அதன்பிறகு அங்கிருந்து ரிஷிகேசில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற போது எடுக்கபட்ட வீடியோதான் அது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி