Breaking News

FACT CHECK: கொரானா ஒரு சீசன் நோய்: யாருக்கும் பரவாது: தனிமைப்படுத்தல் தேவையில்லை!' என உலகசுகாதார அமைப்பு கூறியதாக பரவும் வாட்ஸ்அப் வீடியோ: உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  பிரேக்கிங் நியூஸ்: கொரோனா ஒரு பருவகால வைரஸ் என்று கூறி, யு-டர்ன் எடுப்பதை WHO தனது தவறை முழுமையாக ஒப்புக்கொண்டது. சீசன் மாற்றத்தின் போது இது ஒரு குளிர் புண் தொண்டை. பீதி அடையத் தேவையில்லை. WHO இப்போது கூறுகிறது, கொரோனா நோயாளி தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை அல்லது பொதுமக்களுக்கு சமூக இடைவெளி தேவையில்லை. இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நபருக்கும் பரவுவதில்லை. WHO பத்திரிகையாளர் சந்திப்பைக் காண்க ???? என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த ஆண்டு முதல் சமூக வலைதளங்களில் பலராலும் பரப்பபட்டு வருகிறது. 

ஆனால் அதில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் பொய்யானது ஆகும்

கொரானா பற்றி அந்த வீடியோவில் உள்ள கருத்துக்கள் அனைத்தையும் உலக சுகாதார அமைப்பு கூறவில்லை

மேலும் அந்த வீடியோ செய்தியினை யாரும்  நம்பவேண்டாம் என்று Press Information Bureau (PIB) தெரிவித்துள்ளது. 

மேலும், உலக சுகாதார நிறுவனம் இப்படிப்பட்ட அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் உறுதி செய்துள்ளது. 

மேலும் கோவிட்-19 பரவக்கூடிய ஆபத்தான தொற்றுநோய்தான். அதனால், அதிலிருந்து தற்காத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=7RcJ2yyNkUk

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.reuters.com/article/uk-factcheck-who-transmission/fact-check-the-world-health-organization-did-not-say-covid-19-cant-transmit-from-person-to-person-idUSKBN2492YC?edition-redirect=in 

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback