கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கலாம்,மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கலாம், முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
அட்மின் மீடியா
0
கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வரிடம் மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை
கொரோனா தொற்று அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
கூடுதல்தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று சுகாதாரத்துறை, அரசுத்துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது கொரோனா பரவல் குறையாத 8 மாவட்டங்களை தவிர மற்ற 30 மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்