கோவையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகள் ஆன் லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி
அட்மின் மீடியா
0
கோவை மாநகராட்சி பகுதிகளில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி, முட்டை ஆகியவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய மாநகராட்சி ஆணையர் குமரவேல் பாண்டியன் அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை முதன்மை செயலாளர் உத்தரவின் பேரில், கோவை மாநகரில் கோழி இறைச்சி, முட்டைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும், அவற்றை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கிடவும் அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்