ஆபத்தான ஜோக்கர் வைரஸ் உடனே உங்க போனில் இந்த 8 ஆப்பை டிலைட் செய்யுங்க
அட்மின் மீடியா
0
ஆபத்தான ஜோக்கர் வைரஸ் ஆண்ட்ராய்டு பயன்பாடுகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் முன்னதாக ஜூலை 2020 இல், கூகிள் பிளே ஸ்டோர் சுமார் 40 க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு ஆப்களை குறிவைத்த ஜோக்கர் வைரஸ் அந்த ஆப்களை நீக்கியது
இந்த முறை மீண்டும், ஜோக்கர் வைரஸ் புதிதாக எட்டு புதிய ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை குறிவைத்துள்ளது.
ஜோக்கர் என்னும் வைரஸ் கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பல செயலிகளை தாக்கி வருகிறதுஅந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்களின் எஸ்எம்எஸ், ஓடிபி மற்றும் அழைப்புகள் போன்றவற்றை ஜோக்கர் வைரஸ் திருடுவதாக கூறப்படுகிறது.
1. Auxiliary Message
2. Fast Magic SMS
3. Free CamScanner
4. Super Message
5. Element Scanner
6. Go Messages
7. Travel Wallpapers
8. Super SMS
ஜோக்கர் என்ற வைரஸ் மூலம் அலைபேசியில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுவது மட்டுமின்றி அலைபேசியே செயலிழக்கும் ஆபத்து உள்ளதாககவும் இதனால் இந்த ஆப்களை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்யுங்க என ஆன்டிவைரஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
Tags: தொழில்நுட்பம்