6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
அட்மின் மீடியா
0
தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக திருவள்ளூர், காஞ்சியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை மையம்அறிவித்துள்ளது
சென்னை வானிலை மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்