தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்ச்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
30.06.2021 தேதி
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிம்மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
01.07.2021: தேதி
தேனி, திண்டுக்கல், சேலம், மதுரை, தர்மபுரி, சிவகங்கை விருதுநகர்,
விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்
02.07.2021: தேதி
வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள், வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
03.07.2021 தேதி
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
04.07.2021தேதி
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர் தேனி திண்டுக்கல் தென்காசி) மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை
Tags: தமிழக செய்திகள்