யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
யூ டியூபர் மதன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்துள்ளார்கள்
யூட்யூபில் மதன் எனும் சேனல் வைத்திருப்பவர் தான் மதன். இவரின் சேனலில் பப்ஜி, ஜிடிஏ ஆகிய கேம்களை லைவ் போட்டு ஆன்லைனில் விளையாடிக்கொண்டே கேமின் நுட்பங்களைச் சொல்லிக்கொடுத்து வந்திருக்கிறார் இளைஞர் மதன்.
அப்போது தன்னுடன் சேர்ந்து விளையாடுபவர்களை ஆபாச வார்த்தைகள் மூலம் திட்டுவது வழக்கமாக வைத்துள்ளார்
இதுகுறித்து சைபர் க்ரைம் குற்றப்பிரிவிலும் முதல்வர் தனிப்பிரிவிலும் புகாரளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் சைபர் கிரைம் போலிஸார் மதனை நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கூறி உத்தரவு பிறப்பித்திருந்தார்கள் இந்நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராகாமல் பப்ஜி மதன் தலைமறைவாகியுள்ளார்
Tags: தமிழக செய்திகள்