Breaking News

+1 நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0
11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகளே நுழைவுத் தேர்வு நடத்திக்கொள்ள வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 






பள்ளிகல்விதுறை முன்னதாக அறிவித்த அறிவிப்பில்  11 ஆம் வகுப்புக்கான ஆன்லைன் வகுப்புகளை ஜூன் 3-வது வாரத்தில் தொடங்கவும்  11 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டது. 

அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-15% கூடுதலாக மாணவர் சேர்க்கை செய்ய வேண்டும் என்றும்  குறிப்பிட்ட பாடங்களுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் அந்தந்த பள்ளிகளே,தேர்வு வைத்து 11 ஆம் வகுப்பு சேர்க்கையை நடத்திக்கொள்ளலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. 

இந்நிலையில்,11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் நடத்தும் நுழைவுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback