FACT CHECK பாலஸ்தீனிய குழந்தையை கழுத்தை நெரித்த காவலர் வீடியோ ? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகம் நகர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இஸ்ரேலிய காவல்துறை ஒருவர் சனிக்கிழமையன்று ஒரு பாலஸ்தீனிய குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்பாவி சிறுவன் இறப்பதற்கு முன் கலிமா இ ஷாஹாதத்தை சொன்னான். இந்த வீடியோவை யூடியூப்பில் பதிவேற்ற குழுக்கள் பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இது தொடர்ந்து கூகிள், பேஸ்புக் மற்றும் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. Pls இந்த வீடியோவை வைரல் ஆக்குங்கள், இதனால் அது எல்லா ஊடகங்களையும் சென்றடையட்டும்... என ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி ஜெருசேலமில் நடந்தது இல்லை
அந்த சிறுவன் பாலஸ்தீனத்தை சேர்ந்தவனும் இல்லை
அந்த சம்பவத்தில் அந்த சிறுவன் இறக்கவும் இல்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபட செய்தி கடந்த 2015 ஆம் ஆண்டு ஸ்வீடனில் ஒரு ரயில் நிலையத்தில் ஒரு தனியார் பாதுகாப்பு காவலர்கள் ரயில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததாகக் கூறி 10 வயது முஸ்லீம் சிறுவனை தாக்கிய சம்பவம் அது
அதே வீடியோ 2015 முதல் பேஸ்புக்கில் வைரலாகி வருவதையும், ஒரு இஸ்ரேலிய காவல்துறை பாலஸ்தீனிய குழந்தையை அடித்து கொலை செய்யும் வீடியோவுடன் இதுவும் பகிரப்படுகிறது
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி