FACT CHECK: சவூதி பாடதிட்டத்தில் ராமாயணம்,மகாபாரதம் சேர்ப்பா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஆங்கில, தமிழ், இந்தி என அனைத்து ஊடகங்கள் பலவும் சவுதி அரேபியாவின் பள்ளி பாடத்திட்டத்தில் ராமாயணம்,மகாபாரதம் சேர்க்கப்பட்டு அவைகள் அந்நாட்டு மாணவர்களுக்கு போதிக்கப்படுவதாக செய்தி வெளியிட்டது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பல முண்னனி ஊடகங்களும் அந்த செய்தி வெளியிட்டது , ஆனால் அந்த செய்திக்கு ஆதாரமாக சவுதியை சேர்ந்த யோகா ஆசிரியர் பத்மஸ்ரீ நவுப்-அல்-மார்வாய் என்பவரது
ட்விட்டர் பதிவு ஒன்றை தான் ஆதாரமாக ஊடகங்கள் பகிர்ந்தன.
சவுதியை சேர்ந்த யோகா ஆசிரியர் பத்மஸ்ரீ நவுப்-அல்-மார்வாய் என்பவரது
ட்விட்டர் பதிவில்
அந்த பதிவில் அவர் தனது மகனின்
சமூகவியல் பாட தேர்விற்கு தான் உதவியதாகவும்,இந்த பாடத்திட்டம் சவுதியின்
விஷன்-2௦3௦ திட்டத்தின் படி அமைந்துள்ளதாக கூறியுள்ளார்
மேலும் ராமாயணம் மற்றும்
மகாபாரத இதிகாசங்கள் உள்ள பாடப்புத்தகத்தின் படத்தினை ஸ்க்ரீன் ஷாட்
எடுத்தும் அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்
ஆனால் இந்த செய்தி தவறானது என்றும் அது போல் சவூதி அரசு பாடதிட்டத்தில் ராமாயணம் மற்றும்
மகாபாரத இதிகாசங்கள்uள்ளிட்டவைகள் சேர்க்கவில்லை என சவுதி அரசின் முக்கிய பத்திரிக்கையாளரும்,அரச குடும்பத்திற்கு
வேண்டப்பட்டவருமான இப்ராஹீம் அல் சுலைமான் தன்னுடைய ட்விட்டர் பதிவில், தெரிவித்துள்ளார்
கடும் எதிர்ப்பை அடுத்து மேலும் அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தையை யாரும் பார்க்காதாவாறு லாக் செய்தும் உள்ளார்
அவர் தனது டிவிட்டர் பதிவில்
சவுதி அரசின் ஒப்புதல் பெற்று அங்குள்ள தனியார் பள்ளிகள் கிரேக்க
காவியங்கள் மற்றும் இந்து புராணங்கள் தொடர்பாக பாடத்திட்டத்தில்
சேர்த்துள்ளதாகவும் இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது எனவும் சவுதி
சாராத பிற நாட்டு மக்களுக்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக
தெரிவித்துள்ளார்.
மேலும் சவுதி அரசின் தேசிய பாடத்திட்டத்தில் அப்படி
எதுவும் இல்லை அது தனித்துவமானது அதில் எதையும் கலக்க முடியாது என விளக்கம்
அளித்துள்ளார்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி மார்க்க செய்தி