Breaking News

ராஜஸ்தான் பட்டப்பகலில் காரில் மருத்துவத் தம்பதியினர் சுட்டுக்கொலை - பதறவைக்கும் CCTV காட்சி !

அட்மின் மீடியா
0

 ராஜஸ்தானில் பட்டப்பகலில் அடையாளம் தெரியாத நபர்களால் மருத்துவ தம்பதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 



ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த மருத்துவ தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர். 

பலியானவர்கள் சுதீப் குப்தா மற்றும் அவரது மனைவி சீமா குப்தா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண்ணையும், குழந்தையையும் கொலை செய்த வழக்கில் இந்த மருத்துவ தம்பதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனவே முன்விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்திருக்கும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.



Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback