Breaking News

அல் அக்சா பள்ளியில் இஸ்ரேல் - பாலத்தீன தரப்பு மோதல் வீடியோ

அட்மின் மீடியா
0

ஜெருசலேம் பழைய நகரில் உள்ள அல்-அக்சா மசூதி வளாகம் இஸ்லாமியர்கள் மிகவும் போற்றும் புனித தலங்களில் ஒன்றாக உள்ளது. 



இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை அனுசரிக்க ஆயிரக்கணக்கானவர்கள் நேற்றிரவு அங்கு கூடிய பின்பு இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடங்கின.

மாலை நேர தொழுகைக்கு பின்பு "ஆயிரக்கணக்கான வழிபாட்டாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் நிலைமையை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர" தாங்கள் பலப்பிரயோகம் நடத்தியதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஜெருசலேமில் வெள்ளியன்று நடந்த மோதல்களில் குறைந்தது 180 பாலத்தீனர்களும், ஆறு இஸ்ரேலிய காவல் அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிகின்றது

இவர்களில் பெரும்பாலானவர்கள் அல்-அக்சா மசூதியில் நடந்த மோதலில் காயமடைந்துள்ளனர் கலவரத்தை கட்டுபடுத்த அங்கு இஸ்ரேலிய காவல்துறையினர் பாலஸ்தீன தரப்பினரை நோக்கி ரப்பர் குண்டுகள் மட்டும் மற்றும் 'ஸ்டன் கிரனேடுகளை' வீசினர். 

பாலத்தீனர்கள் இஸ்ரேலிய காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசினர்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback