Breaking News

இன்று முதல் அமலாகிறது பெண்களுக்கான இலவச பேருந்து பயணம்

அட்மின் மீடியா
0

தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, அரசு சாதாரண கட்டண பஸ்களில், 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என்ற, ஸ்டிக்கர் ஓட்டும் பணி நேற்று இரவில் துவங்கியது.


தமிழகத்தில் இன்று முதல் அனைத்து நகர்ப்புற சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பெண்கள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 முதல்வராக நேற்று பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசின் சாதாரண பஸ்களில், பெண்கள் கட்டணம் இன்றி பயணிம் செய்யலாம் என, அறிவித்தார்.

இதையொட்டி, அரசின் சாதாரண கட்டண பஸ்களில், நேற்று இரவோடு இரவாக, 'மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை' என்ற, ஸ்டிக்கர் அச்சிட்டு, ஒட்டும் பணி நடந்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Share this