கொரானா ஆயுர்வேத லேகியத்திற்க்கு ஆந்திர அரசு ஒப்புதல்
ஆந்திராவில், கோவிட் நோயாளிகளுக்கு ஆனந்தய்யா என்ற மருத்துவர் வழங்கிய ஆயுர்வேத மருந்துக்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
கிருஷ்ணபட்னம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தையா, கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு லேகியம்,மற்றும் கண்ணில் சொட்டு மருந்து என பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வந்தார்.இந்நிலையில் ஆந்திர அரசு அந்த மருந்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டது
ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இதில் பக்க விளைவு ஏதும் இல்லை என நிரூபணம் ஆனது. இதனையடுத்து இந்த மருந்துக்கு ஆந்திர அரசு ஒப்புதல் வழங்கியது.
லேகியத்திற்கு மட்டும் ஒப்புதல் அளித்துள்ள ஆந்திர அரசு, கண்ணில் விடப்படும் சொட்டு மருந்துக்கு தடை விதித்துள்ளது.
https://10tv.in/andhra-pradesh/green-signal-to-anandayya-ayurvedic-medicine-230908.html
Tags: இந்திய செய்திகள்