இந்தியாவில் இருந்து நாடு திரும்ப ஆஸ்திரேலியர்களுக்கு தடை: மீறினால் 5 ஆண்டு சிறை
இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, தனது சொந்த நாட்டு மக்களாக இருந்தாலும் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
மேலும்,இந்தியாவில் இருந்து வந்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 66 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது.
வருகின்ற மே மாதம் 3 ஆம் தேதியில் இருந்து இந்த நடைமுறையானது அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலிய நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மே 15ம் தேதி வரை இந்தச் சட்டம் அமலில் இருக்கும். அதன் பின் இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என, ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags: வெளிநாட்டு செய்திகள்