3 பேர் பஞ்சாயத்தில் காலில் விழும் வீடியோ ! என்ன நடந்தது எங்கு நடந்தது? முழு விவரம்
நேற்று முதல் சமூக வலைதளங்கலில் பரபரப்பாக ஒரு வீடியோ வைரல் ஆனது அந்த வீடியோவில் ஊர் பெரியவர்கள் 3 பேர் பஞ்சாயத்தில் காலில் விழும் வீடியோ அது
அந்த சம்பவம் எங்கு நடந்தது, எதனால் நடந்தது
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒட்டனந்தல் என்ற கிராமத்தில் பட்டியல் சமூகத்தினரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் நடந்துள்ளது
இந்த சம்பவம் சம்மந்தமாக 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவெண்ணெய்நல்லூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒட்டனந்தல் என்ற கிராமத்தில் வசிக்கும் பட்டியல் சமூக மக்கள் கடந்த 12ஆம் தேதி கோயில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
ஊரடங்கை மீறி ஒரு பிரிவினர் கரகாட்டத்துடன் கோவில் திருவிழா நடத்தி இசைக்கச்சேரி நடத்தியுள்ளனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் போலீசார் இசைக்குழுவின் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்த புகாரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், பொதுமுடக்க காலத்தில் திருவிழா நடத்த அனுமதி மறுத்ததையொட்டி காவல்நிலையத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு பட்டியல் சமூக மக்கள் ஊர் திரும்பியுள்ளனர்.
கிராமத்தில் கூட்டப்பட்ட கட்டபஞ்சாயத்தில் பட்டியல் சமூக மக்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், மூன்று பேரை அழைத்து பிற சமூக மக்கள் முன்னிலையில் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்ட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 6 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்