புதுச்சேரி 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்திய அரசு!
புதுச்சேரி சட்டப்பேரவையில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்திய அரசு!
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் மூன்று நியமன சட்டமன்ற எம்.எல்.ஏக்களை நேரடியாக நியமித்துள்ளது மத்திய அரசு.
யூனியன் பிரதேச அரசாங்க சட்டம் 1963, பிரிவு 3, உட்பிரிவு 3இன் படி மத்திய அரசு நேரடியாக புதுச்சேரி சட்டப்பேரவைக்கான மூன்று நியமன எம்.எல்.ஏக்களை நியமிப்பதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் அரசாணையில் தெரிவித்துள்ளது.
அதன்படி வெங்கடேசன், வி.பி.ராமலிங்கம் மற்றும் அசோக் பாபு என மூவரை எம்.எல்.ஏக்களாக நியமித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கவும், பட்ஜெட் ஆகியவற்றில் வாக்களிக்கவும் உரிமை உள்ளது என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்