லஞ்ச வழக்கில் மே.வங்கத்தில் 2 அமைச்சர்கள் உட்பட 4 கைது; சிபிஐ நடவடிக்கையால் மம்தா அதிர்ச்சி
மேற்கு வங்கத்தில் போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட திரிணாமுல் காங். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கடந்த 2016 ம் ஆண்டு நாரதா என்ற செய்தி இணையதளம் ஸ்டிங் ஆபரேஷன் மூலம் படங்கள், வீடியோக்களை வெளியிட்டிருந்தது இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ கையில் எடுத்தது.
திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்களான அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி, எம்.எல்.ஏ. மதன் மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி திடீரென பாஜகவில் சேர்ந்தார். ஆனால் தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தராததால் பாஜகவில் இருந்து சோவன் சட்டர்ஜி வெளியேறி இருந்தார்.
Tags: இந்திய செய்திகள்