Breaking News

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்! சட்டசபை மே 11-ல் தொடங்குகிறது!

அட்மின் மீடியா
0

தமிழக அமைச்சரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெறுகிறது. மேலும் 16-வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 11-ல் தொடங்குகிறது.



தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் நாளை நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும்.மேலும் 16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் மே 11-ந் தேதி தொடங்குகிறது. 

இது தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் கி. சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

16-வது சட்டசபையின் முதல் கூட்டம் மே 16-ந் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. மே 11-ந் தேதி எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

புதிய எம்.எல்.ஏக்கள், தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை கொண்டு வரவேண்டும். சட்டசபை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல்கள் மே 12-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும்.


இதனிடையே கீழ்பெண்ணாத்தூர் திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி, தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

ஆளுநர் மாளிகையில் திங்கள்கிழமையன்று கு. பிச்சாண்டி பதவியேற்கிறார்.இதனையடுத்து சட்டசபையில் மே 11-ந் தேதி அன்று எம்.எல்.ஏக்களுக்கு பதவியேற்பு நிகழ்வை நடத்தி வைக்கிறார் கு. பிச்சாண்டி.

 மே 12-ந் தேதி புதிய சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback