Breaking News

ஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC கோடுகள் இயங்காது..வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!!

அட்மின் மீடியா
0

இந்தியாவில் உள்ள பெரு வங்கிகளுடன் சிறிய வங்கிகள் இணைக்கப்பட்ட பிறகு வங்கித்துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சில வங்கிகளின் IFSC கோடுகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.



வங்கித் துறையை மேம்படுத்துவதற்காக 10 பொதுத் துறை வங்கிகளை நான்கு பெரிய வங்கிகளாக மத்திய அரசு இணைத்துள்ளது.  அதன்படி 

1.தேனா வங்கி 

2.விஜயா வங்கி 

பாங்க் ஆப் பரோடாவுடன் இணைந்தன. 


3.ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் 

4. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா 

பஞ்சாப் நேஷனல் வங்கி உடன் இணைந்தன. 

5. ஆந்திரா வங்கி 

6 .கார்ப்பரேஷன் வங்கி 

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்தன. 

7.அலகாபாத் வங்கி

இந்தியன் வங்கியுடன் இணைந்தன. 

8 .சிண்டிகேட் வங்கி

கனரா வங்கியுடன் இணைந்தது

இந்த நிலையில், வருகிற  ஜூலை 1ஆம் தேதி முதல் சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகள் இயங்காது எனக் கனரா வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் தற்போது கனரா வங்கியில் இணைக்கப்பட்டு உள்ள காரணத்தால் அவர்களது பழைய IFSC கோடு பயன்படுத்தி ஜூலை 1ஆம் தேதிக்குப் பின் பணத்தைத் தங்களது வங்கி கணக்கில் பெற முடியாது. 

எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் SYNB எனத் துவங்கும் அனைத்து IFSC கோடு-க்கு மாற்றாக CNRB எனத் துவங்கும் ஐஎப்எஸ்சி கோடு-ஐ பெறுவார்கள்.


உங்கள் புதிய IFSC கோடு தெரிந்து கொள்ள


https://www.canarabank.com/IFSC.html


உங்கள் புதிய IFSC கோடு தெரிந்து கொள்ள


https://www.canarabank.com/UPLOAD/NewsImage/IOB61177eSyndicate-Branch-new-CNRB-IFSC-List.pdf

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback