Breaking News

முத்தலாக் அளித்த கணவர்: மனைவிக்கு மாதம் ரூ.21,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவு

அட்மின் மீடியா
0

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி முத்தலாக்குக்கு தடை கடந்த 2019-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது



உத்தர பிரதேசத்தின் சஹரான்பூரை சேர்ந்த அதியா சப்ரிக்கும் சுல்தான்பூரை சேர்ந்த வஜித் அலி என்பவருக்கும்  கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது

மேலும் அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அதியாவை 2015-ம் ஆண்டில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார் அவரது கணவர்

அடுத்ததாக இதனை எதிர்த்து  கடந்த 2015-ம்ஆண்டில் சஹரான்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் அதியா வழக்கு தொடர்ந்தார்.  எனக்கும் எனது 2 பெண் குழந்தை களுக்கும் மாதம் ரூ.25,000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று அதியா மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அதியாவுக்கும் அவரது குழந்தைகளுக்கும் வஜித் அலி மாதந்தோறும் ரூ.21,000-ஐ ஜீவனாம்சமாக வழங்க வேண்டும்.என்று உத்தரவிட்டார்.

Source:


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback