ஜூன் 1-ம் தேதி முதல் தங்கநகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம்: மத்திய அரசு
ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் தங்க நகைகள் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது
இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து ஹால்மார்க் முத்திரையுடன் தான் கண்டிப்பாக தங்க நகைகள் விற்பனை செய்ய வேண்டும். இதற்கான காலக்கெடு ஏற்கனவே பலமுறை ஒத்தி போடப்பட்டுள்ளது. இனிமேலும் காலக்கெடு வழங்கப்படாது
ஜூன் 1-ஆம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரையுடன் தங்க நகை விற்பனை செய்யப்படாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
அதேபோல் பொதுமக்கள் தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும் என்றும் ஹால்மார்க் முத்திரை இல்லை என்றால் புகார் அளிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசின் செய்தி குறிப்பு
https://bis.gov.in/wp-content/uploads/2021/03/Press_tools_guidelines.pdf
Tags: இந்திய செய்திகள்