FactCheck: கொரோனா ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரும் என பரவும் வதந்தி?? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் பலரும் கொரோனா ஊரடங்கு நாளை முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிப்பு என்று புதிய தலைமுறை நியூஸ்கார்டை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி கடந்த வருட செய்தியாகும். கடந்த 24.06.2020 அன்று தமிழக அரசு அறிவித்த செய்தியினை வெளியிட்ட புதிய தலைமுறை செய்தியினை தர்போது நடந்தது போல் சிலர் ஷேர் செய்து வருகின்றார்கள்
மேலும் புதிய தலைமுறை செய்தி ஊடகமும் உடனடியாக இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது. இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் புதிய தலைமுறை விளக்கம் அளித்துள்ளது
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=DWo5D3VFTbI
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2142414829248747
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி