FACT CHECK வங்கிகளுக்கு தொடர்ந்து 7 நாள் விடுமுறையா? உண்மை என்ன??
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வங்கிகளுக்கு வரும் 27-ம் தேதிமுதல் ஏப்.4-ம் தேதி வரை 7 நாட்கள் விடுமுறைஎன்று ஒரு செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
மார்ச் 27 – மாதத்தின் 4வது சனிக்கிழமை
மார்ச் 28 – ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 29 – ஹோலி விடுமுறை
மார்ச் 30 செவ்வாய் கிழமை
மார்ச் 31- நிதியாண்டின் கடைசி நாள்
ஏப்ரல் 1 – வங்கிகள் வருடாந்திர கணக்குகளை முடிக்கும் நாள்
ஏப்ரல் 2 – புனித வெள்ளி
ஏப்ரல் 3 சனிக்கிழமை
ஏப்ரல் 4 – ஞாயிற்றுகிழமை என்பதால் வங்கி விடுமுறை
மார்ச் 30, ஏப்ரல் 3 – இந்த இரு நாட்களில் மட்டுமே வங்கிகள் வழக்கம் போல செயல்படும்
இதில்
ஹோலி பண்டிகைக்கு தமிழகத்தில் விடுமுறை கிடையாது ஹோலி பண்டிகைக்கு வடமாநிலங்களில்தான் விடுமுறை
அதேபோல் 31-ம் தேதி நிதியாண்டின் இறுதி நாளன்றும் விடுமுறை கிடையாது.
ஏப்.1-ம் தேதி வங்கிக் கணக்கு முடிக்கும் தினத்தன்றும், 2-ம் தேதி புனிதவெள்ளியை முன்னிட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.
3-ம் தேதி, முதல் சனிக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்
.எனவே, சமூக வலைதளங் களில் பரவுவதைப் போல வங்கிகளுக்கு 7 நாள் விடுமுறை என்ற தகவல் தவறானது எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி