FACT CHECK வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுப் போட முடியும்: வாட்ஸ்ஆப் வதந்தி, 49A சேலஞ் ஓட்டு பற்றி பரவும் தவறான தகவல்.....
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்
நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும் பொழுது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றால் உங்களின் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து Section 49A கீழ் சேலஞ் ஓட்டை கேட்டு உங்களின் வாக்கினை செலுத்தலாம்.ஒருவேளை உங்களின் ஓட்டினை வேறு ஒருவர் செலுத்தி விட்டது தெரிய வந்தால் டென்டர் ஓட்டு பற்றி கேட்கலாம். பின்பு உங்களின் வாக்கினை செலுத்திக் கொள்ள முடியும். இதில், ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் டென்டர் வாக்குகள் 14% சென்றால் மறுத்தேர்தல் நடத்தப்படும் என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்வது போல் சேலஞ்ச் ஓட்டு என்று இல்லவே இல்லை, மேலும் தேர்தல் விதிமுறைகள் 1961-ல் பிரிவு 49A என்பது மின்னணு வாக்கு இயந்திரத்தின் வடிவமைப்பு பற்றியே குறிப்பிடுகிறது
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே நீங்கள் ஓட்டுப் போட முடியும்., வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அட்டை இல்லை என்றால் ஆதார் அல்லது உரிய அடையாள அட்டை காட்டி ஓட்டுப் போடலாம்.
ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இன்றி வாக்காளர் அல்லது ஆதார் அட்டை காட்டினாலும், ஓட்டுப் போட முடியாது.
49 ஏ என்பது எதற்கான தேர்தல் விதிமுறை என்றுகூட தெரியாமல் இந்த தகவலை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி