Breaking News

BREAKING: பாமக தேர்தல் அறிக்கை வெளியானது..! தனியார் பள்ளியிலும் இலவச கல்வி, இலவச மருத்துவம் என பல அறிவிப்புகள்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில்  சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது அதில்  பாமக அதிமுகவுடன்  கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிகின்றது 

 

இந்நிலையில் பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வளர்ச்சி மிகு தமிழகம் படைப்போம் என்ற பெயரில் பாமக தேர்தல் அறிக்கையை சென்னை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் காணொளி காட்சி மூலமாக வெளியிட்டுள்ளார் அதில்..



  • 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் ,
  • அரசு பள்ளிகளில் ஒப்பந்த , தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.
  • மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி. தனியார் பள்ளிகளின் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும்
  • அனைவருக்கும் இலவச மருத்துவம்,
  • பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்தும்
  • வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு
  • தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்கள் தமிழக இளைஞர்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்
  • அரசு சார்பில் ஊடகங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்களின் மொத்த மதிப்பில் 3% பத்திரிகையாளர் நல நிதிக்கு வழங்கப்படும். இந்த நிதியைக் கொண்டு பத்திரிகையாளர்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
  • படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு வழிகாட்டத் தனி மையங்கள் அமைக்கப்படும்
  • 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • கர்ப்பிணி பெண்களுக்கான நிதியுதவி ரூ.18,000லிருந்து ரூ.25,000 உயர்த்தப்படும்.
  • 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • பொதுத் துறை வங்கிகளில் உழவர்கள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும்.
  • கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் பயிர்க் கடனுக்கு 15% மானியம் வழங்கப்படும்.

பா.ம.க தேர்தல் அறிக்கை புத்தகத்தின் அட்டையில் இரட்டை இலை, தாமரை சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால் தேமுதிகவின் முரசு சின்னம் பாமகவின் அறிக்கை புத்தகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback