அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னத்தை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்ட்டுள்ளது
திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் எனபவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்
சட்டப்பேரவைத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்னங்களில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில், அந்தக் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். கூட்டணி கட்சியாக இருந்தாலும் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் அந்த சின்னத்தில் போட்டியிட முடியாது. அப்படி போடீயிட்டால் அது சட்டவிரோதம்.
எனவே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சின்னங்களை, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும்.என தனது மனுவில் கூறியுள்ளார். .இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags: தமிழக செய்திகள்