தெரிந்துக் கொள்வோம் நோட்டா ஓட்டு என்றால் என்ன
அட்மின் மீடியா
0
தெரிந்துக் கொள்வோம் நோட்டா ஓட்டு என்றால் என்ன
நோட்டா என்பது வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க பயன்படும் வாய்ப்பாகும்.
நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்றிருக்கும். அதை அழுத்த வேண்டும்.
இந்த ஓட்டை தேர்வு செய்ய நீங்கள் யாரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
நோட்டா வெறும் கணக்குக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர்
நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
எனினும், வேட்பாளர்கள் யாரையும் பிடிக்கவில்லை என, ஓட்டு போடுவோர் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு ஏற்படும்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை புறக்கணிக்க, மக்களுக்கு ஓர் எதிர்ப்பு ஆயுதம் தான் 'நோட்டோ' பட்டன்.
ஒரு வேளை
நோட்டோ ஓட்டு 50,000
XXXXX கட்சி 45,000
YYYYY கட்சி 40,000
WWWW கட்சி 35,000
என்றாலும் நோட்டோ விற்க்கு போட்ட ஓட்டு வேஸ்ட் தான் அந்த XXXXX கட்சி வேட்பாளர்தான் வெற்றி பெற்றார் என்று அறிவிப்பார்கள்
Tags: முக்கிய செய்தி