Breaking News

மஜக அலுவலகம் சென்று தமிமுன் அன்சாரியை சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா

அட்மின் மீடியா
0

மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரியை மமக தலைவர் ஜவாஹிருல்லா நேரில் சந்தித்து பிரச்சாரத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

                            

மனிதநேய மக்கள் கட்சியில் ஜவாஹிருல்லாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து  அக்கட்சியில் இருந்து பிரிந்து வந்து  தமீமுன் அன்சாரி மனித நேய ஜனநாயகக் கட்சியை ஆரம்பித்தார். அடுத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து நாகை சட்டமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகி 5 அம்ச கோரிக்கைகளுடன் மமக அங்கம் வகிக்கும் திமுக கூட்டணியை ஆதரித்து கடிதம் வழங்கினார் ஆனால் திமுக கூட்டணி முடிந்துவிட்டதால் அவருக்கு சீட் வழங்கவில்லை

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் , அப்துல் சமது, குன்னகுடி அனிபா உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து அப்போது பாபநாசம் தொகுதியில் போட்டியிடும் தன்னையும், மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் அப்துல் சமத்தையும் ஆதரிக்க வேண்டும் என்றும்  பிரச்சாரம் செய்ய வேண்டும் என ஜவாஹிருல்லா தமிமுன் அன்சாரியிடம் கேட்டுக்கொண்டார் 




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback