BREAKING 9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது பள்ளிக்கல்வி இயக்குனர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
அட்மின் மீடியா
0
9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது"- பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு உத்தரவு
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் இது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அந்த சுற்றறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த மாத இறுதிக்குள் பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்க வேண்டும், அதற்கான மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்
இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற முதன்மை கல்வி அதிகாரிக்கு கண்ணப்பன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்