Breaking News

சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட சரக்குக் கப்பல் - 5வது நாளாக மீட்க போராடும் ஊழியர்கள்

அட்மின் மீடியா
0

 உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீன்(Ever green) என்னும் சரக்கு  கப்பல் எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட புழுதி புயலால் சிக்கி நிற்கின்றது



சூயஸ் கால்வாய்

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தக பாதையில் ஒன்றாகும். 

மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது.

குறிப்பாக ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக விளங்கி வருகிறது சூயஸ் கால்வாய். 

இந்த கால்வாய் மட்டும் இல்லை என்றால் ஆசியாவில் இருந்து ஆப்பிரிக்கா வழியே ஐரோப்பாவுக்கு செல்ல சுமார் 34 நாட்கள் பயணம் செய்ய வேண்டியதிருக்கும்.

ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 15,000 கப்பல்கள் இந்த சூயஸ் கால்வாயை கடந்து செல்கின்றன. 

உலகின் பல்வேறு நாட்டு சரக்குக் கப்பல்களும் இந்த பாதையைப் பயன்படுத்தி வருகின்றன. 


எவர் கிரீன் கப்பல்

எவர்கிரீன் மெரைன்' எனப்படும் இந்த பிரமாண்ட சரக்கு கப்பல் தைவான் நாட்டின் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமானது இந்த சரக்கு  கப்பல், சீனாவில் இருந்து, ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு சூயஸ் கால்வாய் வழியாக பயணித்தது

தெற்கு நுழைவாயில் இருந்து, 6 கி.மீ., தொலைவில் சென்றபோது பலத்த புழுதி காற்று வீசியது. அதனால், மாலுமியின் கட்டுப்பாட்டை இழந்த இந்த கப்பல்,கால்வாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது.

அதாவது கப்பலின் முன்பகுதி கரையின் ஒரு புறத்திலும், கப்பலின் பின் பகுதி கரையின் மறுபுறமும் தொட்டு கால்வாயின் குறுக்கே சிக்கிக் கொண்டது எவர் கிரீன்கப்பல்.


பத்திரமாக உள்ள கப்பல் ஊழியர்கள்

எவர் கிரீன் கப்பலை ஒட்டி வந்தவர்கள் இந்திய மாலுமிகள் என்பதும் கப்பலில் பயணித்த டீம் மொத்தமும் இந்தியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

கப்பலில் உள்ள ஊழியர்கள் அனைவரும்  பாதுகாப்பாக இருப்பதாக, எவர் கிரீன் கப்பலை நிர்வகித்து வரும்பெர்ன்ஹார்ட் ஷுல்ட் ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து 6 வது நாளாக நடக்கும் மீட்பு பணி 


அந்தக் கப்பலை மணலில் இருந்து வெளியே கொண்டு வர முடியாமல் மீட்புக் குழுவினா் திணறி வருகின்றனா். 

கப்பல் சிக்கிய பகுதியில் உள்ள மண் மற்றும் சேற்றை அகற்ற் இன்னும்  சில வாரங்கள் ஆகலாம் என மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.  


https://www.youtube.com/watch?v=kdGIxc3b3Ls





Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback