Breaking News

டுவிட்டருக்கு போட்டியாக koo சமூக வலைதளம் !

அட்மின் மீடியா
0

இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு விதிமுறைகள் மீறினால் நீக்குகின்றோம் என கூறியது. இதனால் டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சனை உருவாகியுள்ளது. 



இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள கூ என்ற சமூக வலைதளம் கவனம் பெற்று வருகிறது. இதில், மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், ரவி சங்கர் பிரசாத், கிரிக்கெட் வீரர் அணில் கும்ளே,ஈஷா யோக மையம் நிறுவனர் சத்குரு ஆகியோர் ’கூ’சமூக வலைதளத்தில் இணைந்துள்ளனர்  மேலும் இது இந்தியாவில் தயாரான செயலி என்பதால் இச்செயலிக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் கூ செயலி ட்ரெண்டிங்கில் உள்ளது.

koo ஆப் டவுன்லோடு செய்ய


https://play.google.com/store/apps/details?id=com.koo.app&hl=en_IN&gl=US

Tags: இந்திய செய்திகள்

Share this