FACT CHECK மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள் என்ற செய்தி உண்மையா????
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் மசூதியில் இலவசமாக போர்வெல் அமைக்க உதவி எண்கள் என்று கூறி ஒரு செய்தியை ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பாதீர்கள்
அப்படியானால் உண்மை என்ன??
அந்த செய்தியில் மொத்தம் 3 மொபைல் எண்கள் உள்ளன அதில்
9700081587
8886810557
9849233602
ஆகிய 3 எண்களும் உபயோகத்தில் இல்லை என்பதே உண்மையாகும்
மேலும் இது பற்றி தேடுகையில்
பல்வேறு மொழிகளில்
பல்வேறு மாநிலங்களில்
பல்வேறு வருடங்களில்
இந்த செய்தி பரவியுள்ளது தெரிகின்றது
ஒருவேளை அந்த செய்தி உண்மையாக இருந்திருக்கலாம்
யாராவது இதுபோல் உதவி செய்திருக்கலாம் பிறகு தங்கள் நம்பரை மாற்றி இருக்கலாம் ஆனால் தற்போது அதில் உள்ள அனைத்து நம்பர்களும் உபயோகத்தில் இல்லை
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி