Breaking News

Facebook மற்றும் Olx ல் குறைந்த விலையில் செல்போன் விற்பனை போலி விளம்பரம் செய்து ஏமாற்றியவர் கைது

அட்மின் மீடியா
0

சென்னை, நந்தனம், பகுதியை சேர்ந்த சுதாகர்  என்பவர் சுமார் ரூ.55,000/- மதிக்கத்தக்க One Plus என்ற செல்போனை ரூ.29,500/- க்கு விற்பனை செய்வதாக Facebook –ல் வந்த விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டதில் மறுமுனையில் பேசிய நபர் பணத்தை தன்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினால் செல்போனை கொரியர் மூலம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார். அதனை உண்மையென நம்பிய சுதாகர் PhonePe மூலம் இரு தவணைகளாக மொத்தம் ரூ.29,500/- செலுத்தியுள்ளார்.



ஆனால் கூறிய படி மொபைல் போன் வரவில்லை. மேலும் அவரை தொடர்பு கொண்டால் அவர் போனை எடுக்கவில்லை பின்னர் ஏமாற்றப்பட்டதையறிந்த சுதாகர் உடனடியாக இது குறித்து J-1 சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 


சைதாப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர், இச்சம்பவம் குறித்து அடையாறு காவல் மாவட்ட சைபர் குற்றப்பிரிவிற்கு புகார் அளித்ததின்பேரில்  மேற்படி குறைந்த விலைக்கு செல்போன் விற்பதாக வந்த விளம்பரத்தை அளித்து, பொதுமக்களை ஏமாற்றிய குரோம்பேட்டை பகுதியை  சேர்ந்த அரவிந்த்,  மற்றும் அவரது காதலி  பம்மல் பகுதியை சேர்ந்த நளினி, ஆகிய 2 நபர்களை கைது செய்து குற்றவாளிகளிடமிருந்து பணம் ரூ.29,500/- கைப்பற்றப்பட்டது. 

மேலும் போலிஸ் விசாரணையில் இருவரும் சேர்ந்து Facebook, OLX போன்றவற்றில் விளம்பரத்தை பதிவு செய்து, பொதுமக்களை ஏமாற்றியுள்ளதும், அரவிந்த் இது போல பொதுமக்களை ஏமாற்றியது தொடர்பாக, சில மாதங்களுக்கு முன்பு P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வந்ததும், தெரியவந்தது.பின்னர் குற்றவாளிகள் இருவர் மீதும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


எனவே மொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். குறைந்த விலைக்கு போன் கிடைக்குதே என ஆசைபட்டு இது போல் மோசடியானவர்களின் வலையில் விழாதீர்கள்




Tags: எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback