Breaking News

BREAKING: புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா..!

அட்மின் மீடியா
0

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


 

 

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடித‌த்தை கொடுத்துள்ளார்.

இதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

தமிழகத்துடன் சேர்ந்து புதுச்சேரியிலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். 

  இதுவரை ராஜினாமா செய்தவர்கள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தனது பதவியை ராஜினாமான செய்தார். 

அடுத்ததாக எம்எல்ஏ தீப்பாய்ந்தான்-னும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 

அடுத்தாக நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 

அடுத்ததாக இன்று புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நமச்சிவாயம், டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

 

ஆட்சிக்கு ஆபத்து வருமா?

 

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் தற்போது 10 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணியில் உள்ள திமுக 3 எம்எல்ஏக்கள், ஒரு சுயேட்சையின்(மாஹே தொகுதி) ஆதரவு என ஆளும் கூட்டணியின் பலம் பேரவையில் 14 ஆக உள்ளது

 

இதபோல் எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் 7 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணியில் உள்ள அதிமுக 4 உறுப்பினர்களும், பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என்று எதிர்க்கட்சிகளின் பலம் 14 ஆக உள்ளது

Tags: இந்திய செய்திகள்

Share this