Breaking: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு தலைமை தேர்தல் அதிகாரி!
அட்மின் மீடியா
0
80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குபதிவு தொடங்கும் எனவும் மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் எனவும் தெரிவித்தவர் மேலும் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் விரும்பினால் தபால் வாக்கு அளிக்கலாம் என்றும், தபால் வாக்கு முறை கட்டாயம் அல்ல என்று கூறினார்.
Tags: தமிழக செய்திகள்