துபாயில் கொரானா கட்டுபாடுகள் ஏப்ரல் மாதம் வரை நீட்டிப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதை தொடர்ந்து பிப்ரவரி மாதம் முதல் துபாயில் கொரோனாவிற்காக மீண்டும் விதிக்கப்பட்டிருந்த புதிய கட்டுப்பாடுகள் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்து ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தலைமையிலான துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ளது
இந்த கட்டுப்பாடுகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் புனித ரமலான் நோன்பின் ஆரம்பம் வரையிலும் அமலில் இருக்கும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்
தற்பொழுது துபாயில் அமலில் இருக்கும் நடைமுறைகள்:
பப்கள் / பார்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
சினிமாக்கள் மற்றும் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு இடங்கள் உட்பட பொதுமக்கள் அமர்ந்திருக்கும் உட்புற இடங்களில் பார்வையாளர்களின் திறன் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹோட்டல்கள் 70 சதவீத திறனில் இயங்க வேண்டும்.
ஹோட்டல்களில் நீச்சல் குளங்கள் மற்றும் தனியார் கடற்கரைகளுக்குள் 70 சதவீத திறனில் விருந்தினர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
அதிகாலை 1 மணிக்குள் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட வேண்டும்.
மேலும் கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறுபவர்களை, அவர்கள் தனிநபர்களாக இருந்தாலும் அல்லது நிறுவனங்களாக இருந்தாலும் துபாய் காவல்துறையின் கால் சென்டர் 901 வாயிலாகவோ புகாரளிக்கலாம் எனவும் குடியிருப்பாளர்களை அறிவுறுத்தியுள்ளனர்
Tags: வெளிநாட்டு செய்திகள்