ஜூன் மாதம் வரை ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும் சென்னை பல்கலை கழகம் அறிவிப்பு
சென்னை பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைமுறையே தொடரும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், கடந்த டிசம்பர் மாதம் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, வரும் பிப்.8ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரிகளை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்து விட்டது. இந்நிலையில், ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் தொடரும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழக வகுப்புகள் ஆன்லைனில் தொடர்ந்து நடைபெறும் என்றும் ஜூன் மாதத்திற்கு பிறகு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்