Breaking News

தோளில் சுமந்து வீதியெங்கும் வலம் வந்து வழியனுப்பிய மக்கள் ஹீரோவான தலைமை ஆசிரியர்

அட்மின் மீடியா
0
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள மல்லுகுடா கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில்  10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக நரேந்திரா என்பவர் பொறுப்பெற்றுள்ளார்.



மல்லுகுடா கிராம பள்ளிக்கு தலைமையாசிரியராக பொறுப்பேற்று 10 ஆண்டுகள் கடந்த நிலையில் நரேந்திராவிற்கு பணி மாறுதல் கிடைத்துள்ளது. இதனை கிராம மக்களிடையே தெரிவிக்கவே, இதுநாள் வரை தங்களது குழந்தைகளுக்கு கல்வி அறிவை போதித்த நரேந்திராவுக்கு விழா எடுத்து வழியனுப்பி வைக்க அப்பகுதி மக்கள் முடிவெடுத்தனர்.


தங்களது ஆதிவாசி சமுதாய முறைப்படி விழா எடுத்த கிராம மக்கள் அவரை தோளில் சுமந்து வீதியெங்கும் வலம் வந்து ஆடல், பாடலுடன் பாதப்பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.  


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback