இனி ஆன்லைன் சூதாட்டம் விளையாடினால் 6 மாதம் சிறை, ரூ.5,000 அபராதம்': ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல்!
அட்மின் மீடியா
0
சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 2 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கிய நிலையில், இன்று (04.02.2021) ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று சட்டசபையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை தாக்கல் செய்தார்.
அவசர சட்டத்தின் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஆக்குவதற்காக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தடையை மீறி ஆன்லைனில் சூதாடுவதற்கு ரூ.5000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை எனவும் ஆன்லைன் ரம்மி விளையாட அரங்கம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், இரண்டு ஆண்டு சிறை தண்டனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்