அயோத்தியில் புதிதாக கட்டபட்டு வரும் மசூதியின் 5 ஏக்கர் நிலம் எங்களுடையது; 2 பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு
அயோத்தியில் புதியதாக மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என 2 பெண்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பாபர் மசூதி இருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதியளித்து உத்தரவிட்டது. இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட தனியாக ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் ஆணையிட்டது
அதன்பின்பு அயோத்தியில் உள்ள தனீப்பூா் கிராமத்தில் மசூதி கட்ட மத்திய அரசு 5 ஏக்கா் நிலம் வழங்கியது. அந்த இடத்தில் மசூதி, மருத்துவமனை அடங்கிய வளாகம் கட்ட கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று பணி துவங்கப்பட்டது.
இந்நிலையில் அந்த 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என டில்லியை சேர்ந்த ரமா ராணி மற்றும் ராணி கபூர் சகோதரிகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அந்த மனுவில், அயோத்தியில் தங்களது தந்தையின் 28 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் இப்போது வக்பு வாரியம் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சிக்கல் தீர்வுக்கு வரும் வரையில் அதிகாரிகள் சன்னி வக்பு வாரியத்திற்கு நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை, பிப்.,8ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க உள்ளது
Source:
Tags: மார்க்க செய்தி