Breaking News

23 மணி நேர தொடர் பயணம்.. பிரமாண்ட வரவேற்பில் உற்சாகமாக சென்னை வந்தடைந்தார் சசிகலா.....படங்கள் , வீடியோ....

அட்மின் மீடியா
0
23 மணி நேர தொடர் பயணம்.. பெங்களூருவில் நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார் சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகால சிறை தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்குவந்தது.

தன் தண்டனைக் காலத்தின் கடைசி சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், பெங்களூரில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றார். கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கியிருந்தார் சசிகலா. கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அதன்பின்பு 


பெங்களூருவிலிருந்து நேற்று காலை புறப்பட்ட சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னைக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு வந்தடைந்தார்.


சொத்துக் குவிப்பு வழக்கு,  பின்னர் நேற்றைய தினம் பெங்களூர் பண்ணை வீட்டிலிருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை நோக்கி புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் பிரமாண்ட உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  வழிநெடுகிலும் தொண்டர்கள் புடைச்சூழ உற்சாக வரவேற்பில் பயணம் செய்தார்.


வானவேடிக்கை, செண்டை மேளம், தாரை தப்பட்டை,நடனம்  என ஆட்டம் பாட்டத்துடன் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இன்று அதிகாலை 4 மணிக்கு ராமாவரம் தோட்டத்திற்கு அவர் வந்தடைந்தார்.  பின்பு ராமாவரத்தில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம், ஜானகி நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சசிகலா,  அதன் பின்பு தி நகர் வீட்டை வந்தடைந்தார்.

நேற்று காலை பெங்களூரில் தனது பயணத்தை தொடர்ந்த சசிகலா அவர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே சென்னை தி நகர் வீட்டை வந்தடைந்தார்.  






























































Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback